பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று ஹூஸ்டன் நகரில் ஹவுடி மோடி என்ற நிகழ்ச்சியில் 50 ஆயிரம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில், அமெரிக்காவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும், செனட் சபை எம்பியுமான ஜான் கார்னி கலந்துகொண்டார். ஆனால், இதேநேரம் ஜான் கார்னியின் மனைவிக்கு நேற்று பிறந்த நாள் ஆகும். பிரதமர் மோடியுடன் இருந்ததால் ஜான் கார்னியால் அவரது மனைவியுடன் நேற்று இருக்க முடியவில்லை.
அமெரிக்க எம்.பி. மனைவியிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி! - அமெரிக்க செனட்டர் ஜான் கார்னின் மனைவியிடம் பிரதமர் மோடி நகைச்சுவையாக மன்னிப்பு கேட்கும் வீடியோ
ஹூஸ்டன்: அமெரிக்க செனட்டர் ஜான் கார்னின் மனைவியிடம் பிரதமர் மோடி நகைச்சுவையாக மன்னிப்பு கேட்கும் வீடியோ ஒன்றை பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் அலுவலகம் இன்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் நேற்று பிறந்த நாள் கொண்டாடிய ஜான் கார்னியின் மனைவிக்கு வீடியோ மூலம் பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், 'அன்பிற்குரிய உங்களது கணவர் என்னுடன் நேரம் செலவழிப்பதைப் பார்த்து, உங்களுக்கு பொறாமையாக இருக்கலாம். என்னை மன்னித்துவிடுங்கள், மகிழ்ச்சியான வாழ்க்கை மற்றும் வளமான, அமைதியான எதிர்காலத்துக்கு வாழ்த்துகள்’ என கூறியுள்ளார். அந்த வீடியோவில் மோடியுடன் செனட்டர் ஜான் கார்னியும் இருந்தார். ஜான் கார்னி தம்பதிக்கு திருமணமாகி 40 ஆண்டுகள் ஆகின்றன. அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.