ஃபோனி புயல் ஒடிசா வழியாக கரையைக் கடந்ததில், பல்வேறு பகுதிகள் உருக்குலைந்து போனது. இதில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தும், ஏராளமான வீடுகள், வாகனங்கள் சேதமடைந்தும் ஒடிசா மாநிலம் பெரும் சேதத்திற்கு உள்ளானது. இதனால் ஒடிசாவில் கடந்த இரண்டு நாட்களாக மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டு தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
'ஃபோனி'... ஒடிசாவிற்கு 1000 கோடி நிவாரணத் தொகை: மோடி அறிவிப்பு - odisha
புவனேஷ்வர்: ஃபோனி புயலில் பாதித்த ஒடிசாவிற்கு நிவாரணத் தொகையாக ஆயிரம் கோடியை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
!['ஃபோனி'... ஒடிசாவிற்கு 1000 கோடி நிவாரணத் தொகை: மோடி அறிவிப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3202395-thumbnail-3x2-odisha.jpg)
ஒடிசாவிற்கு ஃபோனி புயல் நிவாரணத் தொகையாக ஆயிரம் கோடி அறிவித்த பிரதமர்!
இந்நிலையில், புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி அம்மாநில தலைநகர் புவனேஷ்வருக்கு இன்று காலை வந்தடைந்தார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டார்.
ஒடிசாவிற்கு ஃபோனி புயல் நிவாரணத் தொகையாக ஆயிரம் கோடி அறிவித்த பிரதமர்!
இதனையடுத்து, ஒடிசாவுக்கு ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என மோடி அறிவித்தார். முதற்கட்ட நிவாரணப் பணிக்காக மத்திய அரசு ஏற்கனவே ரூ.381 கோடி அளித்தது குறிப்பிடத்தக்கது.