தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இயற்கையோடு இணக்கமாக வாழ்வதே காலத்தின் தேவை - வெங்கையா நாயுடு! - கிளாஸ்ட்ரோபோபியா

டெல்லி: உறவுகளிடமிருந்து விலகியிருப்பதால் மக்களுக்கு மனச்சோர்வு ஏற்படுவதாக இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

modern-life-marked-by-alienation-aloofness-vp-naidu
modern-life-marked-by-alienation-aloofness-vp-naidu

By

Published : Jun 17, 2020, 2:15 PM IST

தனது சொந்த அனுபவங்களை பகிர்ந்த துணை குடியரசு தலைவர், "அந்த காலத்தில் வலுவான சமூக உறவுகளின் வலையமைப்பு இருந்தது. எல்லோரும் கூட்டாக இருந்தனர். மகிழ்ச்சியையும் வேதனையையும் பகிர்ந்து கொள்வது வழக்கமாக இருந்தது.

ஒவ்வொருவரும் அவரவர் குடும்பங்களின் துயரமான நேரத்தில் பலத்தையும் ஆதரவையும் அளித்தனர்.ஆனால், இப்போது அதற்கு மாறாக நவீன வாழ்க்கை முறை என்பது தனிமை, உறவுகளிடமிருந்து விலகி இருத்தல், அந்நியப்படுதல் ஆகியவற்றை கொண்டிருக்கிறது.

அதன் விளைவாக மனச்சோர்வு ஏற்படுகிறது. நவீன வாழ்க்கை எல்லா பக்கங்களிலிருந்தும் கிளாஸ்ட்ரோபோபியாவுக்கு வழிவகுக்கிறது.இப்போது காணாமல் போன அந்த நாள் வாழ்க்கையை கரோனா ஊரடங்கு மக்களுக்கு மீண்டும் வழங்கி இருக்கிறது.

கரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்ட பின்னர் மக்கள் அனைவரும் சீரான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டும். இயற்கையோடு இணக்கமாக வாழ்வதே காலத்தின் தேவை என்பதை காலம் நமக்கு உணர்த்தியுள்ளது.

உடல் செயல்பாடு, தூக்கம், சிந்தனை செயல்முறைகள், மனதைக் கட்டுப்படுத்துதல், வேலை-வாழ்க்கை சமநிலை ஆகியவை வாழ்க்கையின் அர்த்தத்தையும் நோக்கத்தையும் வரையறுப்பதோடு முன்னோக்கி செல்லும் வழியைக் காட்டுகிறது" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details