டெல்லி: டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 9.5 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ளது. அடர்த்தியான பனிப்பொழிவால் தேசியத் தலைநகரின் முக்கியப் பகுதிகள் அனைத்தும் பனியால் சூழப்பட்டுள்ளது.
காலை 8.30 மணி நிலவரப்படி, சஃப்தர்ஜங் மற்றும் பாலம் வானிலை நிலையங்கள் 300 மீட்டர் தூர அளவிலான பனிமூட்டத்தைப் பதிவு செய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தக் குளிர் காற்று, பனி நிறைந்த மேற்கு இமயமலையில் இருந்து சமவெளிகளை நோக்கி வீசுகிறது. காற்றின் திசை மேற்கு-வடமேற்கு நோக்கி மாறுவதால் பனி மேலும் குறைய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
டெல்லியின் காற்றின் தரம் மிகவும் மோசமான கட்டத்தில் பதிவு செய்யப்பட்டது. டெல்லி நகரின் காற்றின் தரக் குறியீடு காலை 9 மணிக்கு 393ஆக இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 400ஆக இருந்தது.