கழிப்பறைக்குள் ஸ்மார்ட்போணை எடுத்துச் சென்று அதிக நேரம் பயன்படுத்தினால் மூல நோய் ஏற்படும் என சுகாதார துறை சார்ந்த நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சமூக வலைத்தளம் அதிலும் குறிப்பாக வாட்ஸ் ஆப் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. தேவையற்ற நேரம் கழிப்பறையில் தொலைபேசியுடன் இருப்பது, மூல நோய் போன்ற பெரிய பிரச்னைகள் உருவாக வழிவகுக்கிறது என நொய்டாவில் உள்ள ஜெய்பி மருத்துவமனையில் ஜி.ஐ, எச்.பி.பி அறுவை சிகிச்சை துறையை சேர்ந்த நிர்வாக ஆலோசகர் தீபங்கர் சங்கர் மித்ரா கூறியுள்ளார்.
குருகிராமில் உள்ள நாராயண சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆலோசகர் காஸ்ட்ரோ என்டாலஜி, நவீன் குமார் கூறுவதாவது,உங்கள் ஸ்மார்ட்போனுடன் நீங்கள் கழிப்பறையில் அளவுக்கு அதிகமான நேரத்தை செலவு செய்வதால் நீண்ட காலத்திற்கு ரத்தக்கசிவு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும், மூல நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்றார்.