வேளாண் சட்டங்களை எதிர்த்த விவசாயிகளின் போராட்டம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், ஹரியானாவில் மேலும் 14 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே, சோனிபேட், பால்வால், ஜஜ்ஜார் ஆகிய மூன்று மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டிருந்தது.
விவசாயிகள் போராட்டம் எதிரொலி: ஹரியானாவில் இணைய சேவை முடக்கம்! - ஹரியானா இணைய சேவை முடக்கம்
டெல்லி: ஹரியானாவில் புதிதாக 14 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டம்
ஹரியானாவில் உள்ள மற்ற விவசாயிகளும் டெல்லிக்குச் சென்று போராட இன்று முடிவெடுத்தனர். இந்நிலையில், அம்பாலா, யமுனா நகர், கர்னல், கைதால், பானிபட் உள்பட மொத்தமாக 17 மாவட்டங்களில் ஜனவரி 30ஆம் தேதி வரை, இணைய சேவை முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் எல்லைப் பகுதிகளில், கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.