தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சுதந்திர தின பாதுகாப்பு நடவடிக்கை - காஷ்மீரில் இணைய சேவை ரத்து! - ஜம்மு காஷ்மீர் சுதந்திர தினம்

ஸ்ரீநகர்: சுதந்திர தின பாதுகாப்பு நடவடிக்கையாக காஷ்மீரில் இணைதள சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இணையம்
இணையம்

By

Published : Aug 15, 2020, 9:46 PM IST

சுதந்திர தினக் கொண்டாட்டம், இன்று ஆகஸ்ட் 15 நாடு முழுவதும் நடைபெற்ற நிலையில் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களைத் தடுக்கும் விதமாக காஷ்மீர் பகுதி முழுவதும் இணையதள சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்தே சுதந்திர தினத்தன்று ஜம்மு காஷ்மீரில் செல்போன் மற்றும் இணைய சேவைகள் பாதுகாப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. அங்குள்ள பக்க்ஷி மைதானத்தில், கடந்த 2005ஆம் ஆண்டு சுதந்திர தின விழா அணிவகுப்பின்போது குண்டுவெடிப்பு சம்பவம் நிகழந்தது.

இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் பகுதி முழுவதும் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று பாதுகாப்பு ஏற்பாடுகள் கூடுதலாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. கடந்தாண்டு (2019) ஆகஸ்ட் 5ஆம் தேதி சட்டப் பிரிவு 370 நீக்கத்திற்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரில் பல்வேறு நிர்வாக, அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. இந்த நிலையில், இம்முறை இணைய சேவை மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், செல்போன் சேவைகள் வழக்கம் போல செயல்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதையும் படிங்க:பெங்களூரு கலவரம்: காவல்துறையினர் அதிரடி

ABOUT THE AUTHOR

...view details