இது குறித்து இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் இந்தாண்டு மொபைல் டேட்டா சேவை பயன்பாடு 56 மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது, 46 ஆயிரத்து 404 மில்லியன் ஜிபியாக பயன்பாட்டின் சேவை அதிகரித்திருத்துள்ளது. தனிநபர் ஒருவர் 2014ஆம் ஆண்டு சுமார் 0.27 ஜிபி பயன்படுத்திவந்தனர்.
தற்போது, ஒவ்வொருவரும் பயன்படுத்தும் டேட்டா ஜிபிஅளவானது பன்மடங்கு உயர்ந்து தோராயமாக 7.6 ஜிபியாக உள்ளது. இதன்மூலம், டேட்டா வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாய் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.