உலகையே உலுக்கும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன்படி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால், பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகள் இல்லாமல் வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
இந்த நிலையில், புதுச்சேரியில் முதன் முறையாக பாரதியார் கிராம வங்கி மூலம் நடமாடும் ஏடிஎம் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன் தொடக்க விழா நிகழ்ச்சி புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் நடைபெற்றது. அதனை முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர் கந்தசாமி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.