தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆம்புலன்ஸ் வராத விரக்தியில், அரசு அலுவலர் வாகனத்தை அடித்து துவம்சம் செய்த நபர்!

மும்பை: கரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வராத விரக்தியில் அரசு அலுவலரின் வாகனத்தை அடித்து நொறுக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆம்புலன்ஸ் வராத விரக்தியில், அரசு அலுவலர் வாகனத்தை அடித்து துவம்சம் செய்த நபர்!
ஆம்புலன்ஸ் வராத விரக்தியில், அரசு அலுவலர் வாகனத்தை அடித்து துவம்சம் செய்த நபர்!

By

Published : Sep 8, 2020, 10:41 PM IST

இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் அதி தீவிரம் அடைந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

கரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடம் வகிக்கிறது. அம்மாநிலத்தில் நேற்று (செப்.07) ஒரே நாளில் புதிதாக 16 ஆயிரத்து 429 பேர் இந்த ரைவஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 423 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 23 ஆயிரத்து 641ஆக அதிகரித்துள்ளது என்று அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அரசாங்க அலுவலர் ஒருவரின் வாகனத்தை ஒருவர் கட்டையால் அடித்து நொறுக்கும் காணொலி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, அலுவலரின் வாகனத்தை அடித்து நொறுக்கிய வசந்த் மோர் என்பவர் கூறியதாவது, 'எனது உறவினர் ஒருவர் கரோனாவால் உயிரிழந்து மூன்றரை மணி நேரம் ஆகியும்; சடலத்தை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வரவில்லை. கரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலத்தை மின் எரியூட்டு சாதனம் மூலம் மட்டுமே இறுதிச் சடங்குகள் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

புனேவில் வசிக்கும் மக்களுக்கு உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கவில்லை என்றால், அரசு அலுவலர்களுக்கும் வாகனம் பயன்படுத்த உரிமையில்லை' எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details