புதுச்சேரி ரயில் நிலையம் அருகே 30 ஆண்டுகளாக குடிசை அமைத்து வசித்து வரும் ஏழை மக்களை, எந்தவித முன் அறிவிப்பும் இன்றி திடீரென்று ரயில்வே துறையினர் 35க்கும் மேற்பட்ட வீடுகளை அகற்ற முற்பட்டனர். அப்போது அப்பகுதி மக்கள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகனை சந்தித்து இதுகுறித்து தெரிவித்தனர்.
மக்களுக்காக அலுவலர்களிடம் சண்டையிட்ட அதிமுக எம்எல்ஏ - HOUSE
புதுச்சேரி: ரயில்வே நிலையம் அருகே 30 ஆண்டுகளாக குடியிருந்து வரும் 35க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளை அலுவலர்கள் அகற்ற முற்பட்டபோது, சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் அதை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Admk mla
புதுச்சேரி மக்கள்
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர், அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இங்கு 30 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மக்களுக்கு திடீரென்று மாற்று இடம் ஒதுக்கீடு செய்து தராமல் அலுவலர்கள் அகற்றுவது வேதனைக்குரியது என்றும், அங்குள்ள மக்களுக்கு மாற்று இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.