புதுச்சேரி முதலியார்பேட்டையில் உள்ள அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு சமூக அறிவியல் ஆசிரியர், பதினோறாம் வகுப்பு மாணவிகளுக்கு தமிழ் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. இதை பலமுறை தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து எம்.எல்.ஏ., தலைமையில் போராட்டம்! - அரசு பள்ளி
புதுச்சேரி: அரசு பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவை உறுப்பினர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
![ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து எம்.எல்.ஏ., தலைமையில் போராட்டம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4025350-thumbnail-3x2-hhhhh.jpg)
ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து எம்.எல்.ஏ தலைமையில் போராட்டம்!
இந்நிலையில் முதலியார்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பாஸ்கரிடம் மாணவிகள் இதுகுறித்து மனு அளித்துள்ளனர். இதை கருத்தில் கொண்ட எம்.எல்.ஏ., பள்ளி மாணவிகளுடன் இணைந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து எம்.எல்.ஏ தலைமையில் போராட்டம்!
தகவல் அறிந்து வந்த பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் குப்புசாமி, வரும் திங்கட்கிழமை (05.08.2019) அன்று ஆசிரியர்களை நியமிப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.