புதுச்சேரியில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக தனவேலு எம்எல்ஏ காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். அவரிடம் காங்கிரஸ் கட்சி விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. இதற்கு தனவேலு விளக்கம் அளித்து மாநில காங்கிரஸ் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியிருந்ததாவது:
தொகுதி மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும்வகையில் கருத்துகளைத் தெரிவித்துள்ளேன். திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கலைத்துவிட்டு, என். ரங்கசாமியை முதலமைச்சராக நான் முயற்சி எடுத்ததாகக் கூறியிருப்பது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு.