2016ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடைபெற்றத் தேர்தலில் வென்று இரண்டாம் முறையாக ஆட்சி பீடத்தில் அமா்ந்தவர் மம்தா பானர்ஜி. இன்று 65ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் இவருக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "மேற்கு வங்க முதலமைச்சர் திதி மம்தா பானர்ஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். மேற்கு வங்க மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் தொடர்ந்து சேவை செய்ய திமுக சார்பில் வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.