திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் மிக மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். பல்வேறு தலைப்புகளில் மாநிலம் முழுவதும் மக்கள் சந்திப்பு கூட்டங்களில் அவர் பங்கெடுத்து வருகிறார். அதன்படி, மக்களை நேரடியாக சந்தித்து அவர்களிடமிருந்து குறைகள், தேவைகளை மனுவாக பெற்று, ஆட்சிப்பொறுப்பேற்று நூறு நாட்களுக்குள் இதற்கெனவே தனி துறை உருவாக்கப்பட்டு, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் மக்களை சந்தித்து வருகிறார். திருவண்ணாமலையில் தொடங்கிய இப்பயணம் இரண்டு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
வரும் 12 ஆம் தேதி விழுப்புரத்திலிருந்து ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’! - உங்கள் தொகுதியில் ஸ்டாலின்
‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பிலான மக்கள் சந்திப்பு கூட்டங்களின் மூன்றாம் கட்டத்தை வரும் 12 ஆம் தேதி விழுப்புரத்திலிருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார்.
இந்நிலையில் திமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ மூன்றாவது கட்ட சுற்றுப்பயணத்தை திமுக தலைவர், வரும் 12 ஆம் தேதி விழுப்புரத்திலிருந்து தொடங்குகிறார். அன்றே கள்ளக்குறிச்சிக்கு செல்லும் அவர், மக்களிடம் உரையாற்றவிருக்கிறார். அடுத்த நாள் கடலூரிலும், 14 ஆம் தேதி நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரிலும் மக்கள் சந்திப்புகளை நடத்த இருக்கும் ஸ்டாலின், அதனைத்தொடர்ந்து 15 ஆம் தேதி புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் பெரம்பலூரில் மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'ரியல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான்!'