அய்சால் (மிசோரம்):மிசோரம் மாநிலத்தின் முதல் சூரிய மின்சக்தி உற்பத்தி ஆலை அம்மாநில தலைநகர் அய்சாலில் இருந்து 58 கிலோமீட்டர் தொலைவில் துலுங்கவெல் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை 2 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இதன் செயல்பாட்டை அம்மாநில மின்னாற்றல் துறை அமைச்சர் லால்ஷிர்லியானா இன்று தொடங்கிவைத்தார்.
அதன் பின் பேசிய அவர், " நாட்டின் சூரிய மின் சக்தி துறையில் மிசோரம் அடியெடுத்து வைத்திருப்பது மாநிலத்தின் பெருமையான தருணம். அதேபோல், நீர் மின் உற்பத்தியிலும் தன்னிறைவு அடைவதற்கு மிசோரம் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் மின் உற்பத்தி துறையில் சுயசார்பு பாரதம் என்ற இலக்கை அடைய முடியும்" என்றார்.