தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'கெளதம் காம்பீரைக் காணோம்' - போஸ்டரால் பரபரப்பு! - கம்பீரைக் கானோம்

டெல்லி: முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜக எம்பியுமான கெளதம் காம்பீரைக் காணவில்லை என்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Gautam Gambhir

By

Published : Nov 17, 2019, 11:55 AM IST

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெளதம் காம்பீர், பாஜக சார்பில் கிழக்கு டெல்லி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்.பி., ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் கிரிக்கெட் வர்ணனை உள்ளிட்ட வேலைகளில் பிஸியாக இருப்பதால், காம்பீரைத் தொகுதியில் பார்க்க முடிவதில்லை என்ற விமர்சனம் பரவலாகவே உள்ளது.

இந்நிலையில், டெல்லியின் ஐ.டி.ஓ. பகுதியில் கெளதம் காம்பீரைக் காணவில்லை என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 'இவர் கடைசியாக இந்தூரில் நண்பர்களுடன் ஜிலேபி தின்று கொண்டிருந்தார். இவரைப் பற்றிய தகவல்கள் கிடைத்தால் உடனடியாக தெரிவிக்கவும்' என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐடிஓ பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்

டெல்லியைத் திணறடித்துக் கொண்டிருக்கும் காற்று மாசு குறித்து விவாதிக்க நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கெளதம் காம்பீர் பங்கேற்கவில்லை என்பதால், இந்தப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: 'காப்பாற்ற வேண்டியது இந்தியாவை அல்ல காங்கிரஸை' - பாஜக தாக்கு

ABOUT THE AUTHOR

...view details