உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் பகுதியைச் சேர்ந்த 23 வயது சட்டக் கல்லூரி மாணவி ஒருவர், பல கல்லூரி மாணவிகளின் வாழ்க்கையை பாஜக மூத்தத் தலைவர் சின்மயானந்த்சீரழித்துள்ளதாகவும், தன்னை கொலை செய்ய அவர் முயற்சிப்பதாகவும் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தார். இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி, பிரதமர் மோடி ஆகியோர் உதவ வேண்டும் எனவும் அதில் கோரிக்கை வைத்திருந்தார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் அவரைக் காணவில்லை.
சட்டக் கல்லூரி மாணவி கண்டுபிடிப்பு; சின்மயானந்த் வழக்கில் திடீர் திருப்பம்? - Chinmayanadha
லக்னோ: பாஜக மூத்தத் தலைவர் சின்மயானந்தால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் உத்தரப் பிரதேச சட்டக் கல்லூரி மாணவி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சட்டக் கல்லூரி மாணவியின் தந்தை, ஆகஸ்ட் 27ஆம் தேதி காவல் நிலையத்தில் சின்மயானந்துக்குஎதிராகப் புகாரளித்தார். ஆனால், அவர் பாஜகவின் முக்கிய புள்ளி என்பதால் அவரை அழைத்து காவல் துறையினர் விசாரணை செய்யவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து சின்மயானந்த்தின்வழக்கறிஞர், தன் கட்சிக்காரரின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிப்பதற்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்நிலையில், காணாமல் போனதாகச் சொல்லப்படும் சட்டக் கல்லூரி மாணவி தன் நண்பருடன் ராஜஸ்தானில் உள்ளதாக காவல்துறை வட்டாரம் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்த வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.