உத்தரப் பிரதேசம் மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் ஷியாம்தூர்வா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், ஊருக்கு வெளியே உள்ள கால்வாய்க்கு சென்றார். இதை நோட்டம் விட்ட அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர், சிறுமியை வழிமறித்து கரும்பு வயலுக்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தனர். பின்னர் மயக்கமடைந்த சிறுமியை, அங்கேயே விட்டுச் சென்றனர்.
உ.பி.,யில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இருவர் மீது வழக்கு - உத்தரப்பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்புணர்வு
லக்னோ: மகாராஜ்கஞ்சில் கால்வாய்க்கு சென்ற சிறுமியை, இளைஞர்கள் இருவர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
rape
இதையடுத்து அவ்வழியாக சென்ற ஒருவர், இது குறித்து காவல் துறைக்கு தகவல் அளித்தார். பின்னர் சம்பவ இடம் சென்ற காவல்துறையினர், மயக்கமடைந்த சிறுமி மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைத் தொடர்ந்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், இளைஞர்கள் இருவர் மீதும் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அதில் ஒருவரை கைது செய்த காவல்துறையினர் , தலைமறைவாகிவுள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர்.