வடக்கு டெல்லியில் உள்ள கடைக்கு அருகே ஒரு குழந்தை அழுகும் சத்தம் கேட்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் துணிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த குழந்தையை மீட்டனர்.
இதற்கிடையே, கடைக்கு அருகே உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தபோது ஒரு சிறுமி அக்குழந்தையை அங்கு எறிந்தது தெரியவந்தது. இதையடுத்து, அச்சிறுமியிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.