ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை அடுத்துள்ளளது ராச்சப்பள்ளி கிராமம். இப்பகுதியில் வசித்துவரும் தேரங்குலா ரவி என்பவர் அங்குள்ள சிறுவர் சிறுமிகளுக்கு பகவத் கீதையை கற்றுத் தந்துவருகிறார்.
அவரிடம் பகவத் கீதை படிக்கும் மாணவர்களுக்கு கடந்த வியாழக்கிழமை(நவம்பர் 28) மதியம் தேர்வு ஒன்றை நடத்தியுள்ளார். தேர்வு முடிந்த பின், அங்கிருந்த மாணவி ஒருவரை தனியாக அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக டிஎஸ்பி வாசுதேவன் தெரிவித்துள்ளார்.