ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 14 வயது சிறுமியை இருவர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கடத்திச் சென்று பாலியல் வன்புணவர்வு செய்துள்ளனர். அங்கிருந்து தப்பித்த அந்தச் சிறுமி வீடு வந்து இது குறித்து குடும்பத்தாரிடம் தெரிவித்தார்.
அதையடுத்து குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல் துறையினர் ஒருவரைக் கைதுசெய்துள்ளனர்.