தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தெலங்கானாவில் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு ஆளான வழக்கில் திடீர் திருப்பம்! - பலாத்காரம் செய்யப்பட்டதாகக் புகாரளித்த சிறுமி குற்றச்சாட்டு மருத்துவ பரிசோதனை

தெலங்கானா: பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதாக புகாரளித்த சிறுமி, மருத்துவ பரிசோதனைக்குப் பின் அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை வன்புணர்வு செய்ய முயன்றதாக பிறழ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Minor girl complains of gang rape in Telangana
Minor girl complains of gang rape in Telangana

By

Published : Jan 24, 2020, 12:17 PM IST

தெலங்கானா மாநிலத்தின் சங்காரெட்டி பகுதியில் அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் தன்னை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக 16 வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதன்பின், தான் வன்புணர்வு செய்யப்படவில்லை என்று அச்சிறுமி கூறினார். ஆனால் தன்னை அடையாளம் தெரியாத நபர்கள் வன்புணர்வு செய்ய முயன்றதாகக் குற்றஞ்சாட்டினார்.

இதைத்தொடர்ந்து போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: அமைதி காக்கும் நிர்பயா குற்றவாளிகள்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details