தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

15 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை! - minor girl gang rape

ஜெய்ப்பூர்: 15 வயது மதிக்கத்தக்க சிறுமியைக் கடத்திக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இருவரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

Minor girl gang rape
Minor girl gang rape

By

Published : Oct 7, 2020, 7:12 PM IST

ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டத்தில் 15 வயது மதிக்கத்தக்க சிறுமியை இருவர் இணைந்து அவரது வீட்டிலிருந்து கடத்தியுள்ளனர். பின்னர் இருசக்கர வாகனத்தில் அந்த சிறுமியை அருகிலிருக்கும் ஒரு இடத்திற்கு கொண்டுச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அப்போது இந்த வக்ரமான செயலை தங்களது செல்போன்களில் படம் எடுத்துள்ளனர். பின்னர் மயக்க நிலையில் இருந்த அச்சிறுமியை சம்பவம் நடந்த இடத்திலேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதனிடயே சிறுமியின் குடும்பத்தினர் அவரைக் காணவில்லை என ஊருக்குள் தேடியபோது அவ்வூரின் பள்ளிக்கட்டடத்திற்கு அருகில் சிறுமி மயக்கமான நிலையில் கிடந்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதித்தனர்.

இதற்கிடையே, பார்மர் மாவட்ட ஆட்சியர் விஷ்ராம் மீனாவும், காவல் கண்காணிப்பாளர் ஆன்ந்த் சர்மாவும் மருத்துவனைக்குச் சென்று பாதிப்புக்குள்ளான சிறுமியையும் அவரது குடும்பத்தையும் சந்தித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியை நன்கு கவனித்துக் கொள்ள மருத்துவர்களிடம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். மேலும், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். காவல் கண்காணிப்பாளர் ஆனந்த் சர்மா, பாதிப்புக்குள்ளான குடும்பத்தினர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இதையும் படிங்க:அசாம் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு: தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது!

ABOUT THE AUTHOR

...view details