உத்தரப் பிரதேச மாநிலம் சாகேரி நகரைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவரை கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்றனர். இதையடுத்து, அவரது பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
பின்னர், சிறுமியைத் தேடும் வேட்டையில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், கடத்திச் செல்லப்பட்ட சிறுமி, கடத்தல் காரர்கள் பிடியிலிருந்து தப்பி தனது வீட்டிற்கு வந்துள்ளார். தனது பெற்றோரைக் கண்ட அச்சிறுமி தன்னை இரண்டு நாள்களாக வெவ்வேறு இடங்களில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறியுள்ளார்.