மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் சிறுமிக்கும், பூசன்(22) என்ற இளைஞருக்கு ஃபேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் தங்களுடைய வாட்ஸ்அப் எண்ணைப் பகிர்ந்துகொண்டு அதில் பேசிவந்துள்ளனர்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டிய மூவர் கைது! - சிறுமி பாலியல் வன்கொடுமை
மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
![சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டிய மூவர் கைது! minor gang raped](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:27:28:1605448648-9548018-810-9548018-1605417407521.jpg)
இந்நிலையில், நவம்பர் 12ஆம் தேதி பூசன் அச்சிறுமியை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அங்கு பூசனின் நண்பர்களான பிரதமேஷ், கேசவ் ஆகிய இருவரும் ஹோட்டல் அறையில் இருந்தனர். இதைக் கண்ட சிறுமி, அங்கிருந்து தப்பிக்க முயன்றார். ஆனால் அவரை வற்புறுத்தி மூவரும் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவும் எடுத்துள்ளனர்.
மேலும், இதுகுறித்து வெளியே சொன்னால் வீடியோவை இணையத்தில் பதிவேற்றி விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இதனை சிறுமி தன் பெற்றோரிடம் கூறியதையடுத்து அவர்கள் காவல் துறையிடம் புகாரளித்தனர். புகாரின் பேரில் பூசன் மற்றும் அவரின் இரு நண்பர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.