மேற்குவங்கம் மாநிலம் தெற்கு கொல்கத்தாவில் உள்ள எக்பால்பூரில், 12 வயது சிறுமியை நான்கு பேர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 8ஆம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமியை பிறந்தநாள் விழாவிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பாலியல் வன்புணர்வு செய்தனர். இது தொடர்பாக, சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
12 வயது சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு - நான்கு பேர் கைது - பாலியல் வன்புணர்வுக்குள்ளான சிறுமி
கொல்கத்தா: பிறந்தநாள் விழாவிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
Rape
அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அமர்ஜித் சவுபால், மனோஜ் சர்மா, விகாஸ் மல்லிக், ரித்விக் ராம் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திக்கொண்டவர்கள் ஆவார்கள். இதில், சவுபால், சர்மா ஆகியோர் சிறுமியின் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நால்வரும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் களைக்கட்டும் விவசாயிகளின் தைத்திருவிழா!