தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து! - சாஸ்திரி பவனில் தீவிபத்து

டெல்லி: சாஸ்திரி பவனில் உள்ள தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக அலுவலகத்திலுள்ள ஒரு அறையில் இன்று(ஜூலை 10) காலை சிறிய தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

minor-fire-reported-at-i-and-b-ministry-office-room-in-shastri-bhawan
minor-fire-reported-at-i-and-b-ministry-office-room-in-shastri-bhawan

By

Published : Jul 10, 2020, 3:39 PM IST

டெல்லி சாஸ்திரி பவனிலுள்ள தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக அலுவலகத்தில் இன்று காலை 11.40 மணியளவில் சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், உடனடியாக தீயை அணைத்தனர்.

இதுகுறித்து டெல்லி தீயணைப்புத் துறையின் இயக்குநர் அதுல் கார்க் கூறுகையில், 'தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக அலுவலக அறையிலுள்ள ஏசி நிலைப்படுத்தி மற்றும் மின் கம்பிகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

இந்த ஒரே வாரத்தில் சாஸ்திரி பவனில் ஏற்பட்ட இரண்டாவது தீ விபத்து சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சக அலுவலகத்திலும் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details