தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிணை வழங்கியும் வெளியே விடாமல் இழுத்தடித்த சிறைக் கண்காணிப்பாளர்! - பிணை வழங்கியும் வெளியே விடாமல் இழுத்தடித்த சிறைக் கண்காணிப்பாளர்

லக்னோ: சிறை கண்காணிப்பாளரின் சிறிய தவறால் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் பிணை கிடைத்தும் எட்டு மாதங்களாக சிறைவாசம் அனுபவித்துள்ளார்.

Minor error
Minor error

By

Published : Dec 21, 2020, 2:40 PM IST

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வினோத் குமார் பருவார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்திருந்தார்.

இவரை கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவரது பெயரில் பிழை இருந்ததால் பிணை கிடைத்தும் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.

பெயரில் நடந்த தவறு:

ரிமாண்ட் படிவத்தில் விண்ணப்பதாரரின் பெயர் வினோத் குமார் பருவார் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் நீதிமன்றத்தின் பிணை உத்தரவில் அவரது நடு பெயரான 'குமார்' என்பது குறிப்பிடப்படாமல், அதற்கு பதிலாக வினோத் பருவார் எனக் குறிப்பிடப்பட்டிருந்நது.

பெயர் முரண்பாடு காரணமாக பிணையில் விடுதலை செய்யும் உத்தரவை மறுத்து, வினோத்தை சிறை கண்காணிப்பாளர் ஒருவர் எட்டு மாதங்கள் சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்திருந்தார்.

இதையடுத்து பெயர் திருந்தம் செய்யும் பணியை வினோத் மேற்கொண்டபோது நீதிமன்றம் அவரது சிறைவாசம் பற்றி தெரிந்து கொண்டது. விண்ணப்பத்தை விசாரித்த நீதிமன்றம் சிறிய தொழில்நுட்ப கோளாறால் நிகழ்ந்த இந்த தவறை உணர்ந்தது. சிறையில் அடைக்கப்பட்ட அவரை பிணையில் விடுதலை செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சிறை கண்காணிப்பாளருக்கு சம்மன்:

இதனைத் தொடர்ந்து, பிணை உத்தரவை மதிக்காத சிறை கண்காணிப்பாளருக்கு நீதிபதிகள் சம்மன் அனுப்பினர். மேலும் அவர் மீது துறை சார்ந்த நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது என்பதற்கு காவல்துறை விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜரான சிறை கண்காணிப்பாளர், டிசம்பர் 8ஆம் தேதி வினோத் குமாரை விடுதலை செய்து விட்டோம் என தெரிவித்தார். பிணை பிறப்பித்தும் விடுதலை செய்யாததற்கு அவர் அளித்த வாக்குமூலத்தை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details