தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உபி.,யில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி தற்கொலை முயற்சி! - உபியில் சிறுமி தற்கொலை முயற்சி

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான 17 வயதான சிறுமி, தொடர் மிரட்டல் காரணமாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ape
aperape

By

Published : Oct 1, 2020, 2:20 PM IST

உத்தரப் பிரதேசம் மாநிலம் பாக்பத் பகுதியைச் சேர்ந்த 17 வயதான சிறுமியை, ஒருவர் வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அதுமட்டுமின்றி அவ்வப்போது சிறுமியை துன்புறுத்தியது மட்டுமன்றி வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டி வந்துள்ளார்.

இதனால், அச்சமடைந்த சிறுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக, சிறுமியை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மருத்துவமனையில் சுய நினைவுக்கு வந்த சிறுமி, தனது தந்தையிடம் நடந்தவைகளை கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் வாசிம் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details