தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சத்தீஷ்கரில் சிறுவனுக்குப் பாலியல் துன்புறுத்தல்! - சத்தீஷ்கரில் சிறுவன் வன்புணர்வு

ராய்ப்பூர்: சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவரைக் காவலர்கள் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Minor boy raped in Chattisgrah's Jashpur
Minor boy raped in Chattisgrah's Jashpur

By

Published : Dec 8, 2019, 5:41 PM IST

சத்தீஷ்கர் மாநிலம் ஜாஸ்ப்பூர் மாவட்டம், கோலதோரி கிராமத்தில் உள்ள மைதானத்தில் 6 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அவனை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தூக்கிக் கொண்டு மறைவான இடத்தில் வைத்து, பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுவன் தனது தந்தையிடம் நடந்த சம்பவம் பற்றி அழுதுக் கொண்டே கூறியிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் பதல்கோன் காவல் நிலையம் சென்று புகார் அளித்தார்.

இந்தப் புகாரை பெற்றுக் கொண்ட காவலர்கள், சிறுவனிடம் தவறாக நடந்த அந்த நபரைக் கைது செய்தனர். அவனிடம் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜாஸ்ப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தால் ஆயம்

இந்தச் சம்பவம் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தால் ஆயம் கூறும்போது, '' பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் '' என்றார்.

இதையும் படிங்க : பிறந்தநாள் கொண்டாட சென்ற மாணவிக்கு நேர்ந்த கொடுமை - 4 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details