தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆன்லைன் கேமில் தோல்வி... கிண்டல் செய்த 9 வயது சிறுமியை கொன்ற சிறுவன்! - இந்தூரில் ஆன்லைன் கேம் தகராறில் சிறுமி கொலை

இந்தூர்: ஆன்லைன் கேமில் 9 வயதான சிறுமியிடம் தொடர்ச்சியாக தோல்வியடைந்த சிறுவன் ஒருவன், ஆத்திரத்தில் சிறுமியை கல்லால் அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

nl
nl

By

Published : Sep 8, 2020, 8:53 PM IST

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் லாசுடியா பகுதியை சேர்ந்த இரண்டு குழந்தைகள், ஆன்லைனில் கேம் ஒன்று விளையாடி கொண்டிருந்துள்ளனர்.

தொடர்ச்சியாக பல முறை 11 வயதான சிறுவன் ஒருவன், 9 வயதான சிறுமியிடம் தோல்வி அடைந்துள்ளான்.

லாக்டவுன் தொடங்கியது முதலே தோல்வியை மட்டும் சந்தித்து வந்த சிறுவனை சிறுமி கிண்டல் செய்தது கோபத்தை ஏற்படுத்தியது.

இரண்டு நாள்களுக்கு முன்பு, சிறுமியை தனியாக பேச வேண்டும் என்று வயல் பகுதிக்கு அழைத்து சென்ற சிறுவன் கிண்டல் செய்யாத என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளான்.

ஒரு கட்டத்தில் கிழே கிடந்த கல்லை எடுத்து வீசியதில், சிறுமி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிழே மயங்கி விழுந்துள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவன், யாருக்கும் தெரிவிக்காமல் வீட்டின் பாத்ரூமில் சென்று மறைந்து கொண்டுள்ளார்.

நீண்ட நேரமாகியும் சிறுமி வராததை தொடர்ந்து, பெற்றோர்கள் தேட தொடங்கியுள்ளனர். அப்போது, சிலர் ஒரு சிறுவனுடன் உங்கள் மகள் வயல் பக்கம் சென்றதை காலையில் பார்த்தாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அங்கு விரைந்த பெற்றோர் மகள் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து, சிறுவனிடம் காவல் துறையினர் விசாரணை செய்ததில் ஆன்லைன் கேம் தோல்வி குறித்தும் தெரியாமல் கொலை செய்தது குறித்தும் பயத்துடன் தெரிவித்துள்ளான்.

ABOUT THE AUTHOR

...view details