ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள அரசு விடுதி ஒன்றில் தேசாரி ஆதித்யா (8) என்ற சிறுவன் தங்கி படித்து வந்துள்ளார். நேற்று விடுதி கழிப்பறைக்குச் சென்ற தேசாரி ஆதித்யா வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அவரது நண்பர்கள் விடுதி முழுவதும் தேடினர்.
இந்நிலையில், கழுத்தில் வெட்டுக் காயத்துடன் கழிவறையில் ரத்த வெள்ளத்தில் தேசாரி ஆதித்யா சடலமாக கிடந்துள்ளார். சிறுநீர் கழிக்கச் சென்ற சக மாணவர்கள், தேசாரி ஆதித்யாவின் உடலைக் கண்டு கூச்சலிட்டனர். இதனையடுத்து விடுதி காப்பாளர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.