தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உணவு சார் கைபேசி செயலி - தொடங்கிவைத்த அமைச்சர்கள்!

புதுச்சேரி: பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் உணவுசார் கைபேசி செயலி, யூடியூப் சேனலை அமைச்சர்கள் கமலக்கண்ணன், ஷாஜகான் தொடங்கிவைத்தனர்.

By

Published : Jan 22, 2020, 6:59 PM IST

புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற உணவுசார் கைபேசி செயலி, யூடியூப் சேனல் தொடக்க விழாவில் புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகான் இருவரும் கலந்துகொண்டனர். பின்னர், இரு அமைச்சர்களும் உணவுசார் கைபேசி செயலி, யூடியூப் சேனலை தொடங்கி வைத்தனர்.

அதைத்தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் ஷாஜகான் நீரிழிவு நோய் வராமல் தடுக்க உணவை மென்று சாப்பிடுவது அவசியம் என மாணவிகளுக்கு அறிவுரைக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், உணவு சார் கைபேசி மொபைல் ஆப், யூடியூப் சேனலில் வர்த்தக உணவு வகைகளுடன், பாரம்பரிய உணவு வகைகளும் அறிமுகப்படுத்துதல் அவசியம் என்றார்.

இந்த செயலியின் மூலம் அன்றாடம் உண்ணும் உணவு பொருட்களில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவு, கொழுப்பு, சர்க்கரை, உப்பு உள்ளிட்டவற்றின் விகிதாசாரத்தை தெரிந்துகொள்ளாலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரேஷன் கார்டுக்கு ரூ.900 வழங்கப்படும்: சமூகநலத் துறை அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details