புதுச்சேரிக்கு உட்பட்ட ஏனாம் சட்டப்பேரவைத் தொகுதியில் கோதாவரி ஆற்றுப்படுகைக்கு தடுப்பு சுவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஏனாமின் வளர்ச்சிக்குதுணைநிலை ஆளுநர் பல்வேறு வகைகளில் தடையாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டி, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், தனது ஆதரவாளர்களுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏனாம் வந்த கிரண் பேடிக்கு கருப்புக்கொடி, கருப்பு பலூன் உள்ளிட்டவற்றை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதனால் தனது ஆய்வை பாதியிலேயே முடித்துக்கொண்டு கிரண்பேடி புதுச்சேரி திரும்பினார். இந்நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் ஆய்விற்காக ரயில் மூலம் ஏனாம் பகுதிக்கு அதிகாரிகள் உடன்சென்றுள்ளார். இதற்கிடையே ஆளுநர் ஆய்வு செய்யும் இடங்களில் கருப்பு பலூன்களை ஏந்தி போராட்டம் நடத்த இருப்பதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.