கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.
'நிபா வைரஸ் பாதிப்பு- ஆறு பேருக்கு இல்லை' - கேரள அமைச்சர் ஷைலஜா - கொச்சி
திருவனந்தபுரம்: நிபா வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள ஆறு பேருக்கு இந்த நோய்த்தொற்று இல்லை எனவும் அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.
பின்னர் அந்த இளைஞர் உட்பட நிபா வைரஸ் அறிகுறிகள் உள்ள ஏழு பேர் எர்ணாகுளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தனிப்பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களில் ஆறு பேரின் ரத்த மாதிரிகள் புனே வைரஸ் பரிசோதனை மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த இளைஞரைத் தவிர மீதமுள்ள ஆறு பேருக்கு இந்த நோய்த்தொற்று இல்லை என அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார். மேலும் சிறப்பு தனிப்பிரிவில் இருந்து நோயாளிகள் யாரும் டிஸ்சார்ஜ் செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.