புதுச்சேரியில் விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள் திறக்க மாநில அரசை வலியுறுத்தியுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலியில், "கரோனாவால் பாதிக்கப்பட்ட எட்டு பேர் புதுச்சேரி அரசு மருத்துவமனையிலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாநிலம் முழுவதும் 5,619 பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்ததில் 5,320 பேருக்கு நோய்த்தொற்று இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.