பிகாரில் மூளை காய்ச்சல் தாக்கி 100 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் ஒன்று முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆகும். உயிர் பலியை தடுத்து நிறுத்த மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு முயற்சிகளை செய்துவருகிறது.
மூளை காய்ச்சல் பலி விவகாரம்: பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு! - மூளை காய்ச்சல்
பாட்னா: மூளை காய்ச்சல் தொடர்பாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் பிகார் சுகாதாரத் துறை அமைச்சர் மங்கள் பாண்டே கிரிக்கெட் ஸ்கோர் கேட்டது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
bjp
இதுகுறித்து விளக்கம் அளிக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், பிகார் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மங்கள் பாண்டே செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். அப்போது மங்கள் பாண்டே, கிரிக்கெட் ஸ்கோர் கேட்டுள்ளார்.
குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை குறித்து விளக்கம் அளிக்க நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் ஸ்கோர் கேட்டது பலர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.