புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் உள்ள மாநில பாஜக அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் திருத்தம் செய்து சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் மறுக்காமல், கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் பேட்டி அச்சட்டத்திற்கு எதிராக மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானங்கள் நிறைவேற்றுவது அரசியலமைப்புக்கு விரோதமானது. குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை. அனைத்து நாடுகளிலும் மக்கள் தொகை பதிவேடு உள்ளது. எனவே அது குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்.
மத்திய அரசு, அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான உதவிகளை செய்துவருகிறது. புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக நிலுவையில் உள்ள அனைத்துத் திட்டங்களையும் மத்திய அரசு விரைவில் நிறைவேற்றும்” என்றார்.
இதையும் படிங்க:மழையையும் பொருட்படுத்தாது சிஏஏ போராட்டத்தில் பங்கேற்ற பெண் உயிரிழிப்பு