தெலங்கானா மாநிலம், ரென்ஜல் கிராமத்தில் பாஸ்கர் ரெட்டி என்பவர் விவசாயத்திற்காக புதிய வாகனத்தை உருவாக்கியுள்ளார். அது மினி டிராக்டர் என்று அழைக்கப்படுகிறது. 4 அடி அகலம், 8 அடி நீளமுள்ள இந்த மினி டிராக்டரில் ஆட்களையும் ஏற்றிக் கொள்ளலாம். விவசாயத்திற்கு தேவையான பொருட்களையும் அதில் எடுத்துச் செல்லலாம். இந்த மினி டிராக்டரின் விலை ரூ.20 ஆயிரம்.
மாற்றி யோசித்த விவசாயி; மினி டிராக்டரை வடிவமைத்து அசத்தல்! - தெலங்கானா
ஹைதராபாத்: விவசாயம் சார்ந்த பணிகளுக்காக மினி டிராக்டரை ஒன்றை வடிவமைத்து ரென்ஜல் கிராம விவசாயி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளார்.
Mini tractor
இது குறித்து விவசாயி கூறுகையில், "விவசாயத்திற்காக வேலைக்கு செல்லும் ஆட்களையும், அதே சமயத்தில் தேவையான பொருட்களையும் எடுத்துச் செல்லவும் உபயோகமாகவுள்ளது. இந்த டிராக்டரை இரு சக்கர வாகனம் வைத்திருக்கும் அனைவரது வாகனத்திலும் ஒன்று சேர்த்து டிராக்டர் போல் பயணிக்க இயலும்" என்று தெரிவித்தார்.