தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒரே இரவில் கோடிஸ்வரரான கர்நாடக இளைஞர் - ரூ.23கோடி பரிசு - Overnight youth in Millionaire

மும்பை: ஆன்லைனில் வாங்கிய லாட்டரியில் பரிசு விழுந்தையடுத்து ஒரே இரவில் கர்நாடக இளைஞர் ஒருவர் கோடீஸ்வரராகியுள்ளார்.

முகமது பயஸ்

By

Published : Oct 4, 2019, 1:23 PM IST

கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்தவர் முகமது பயஸ்(24). மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், ஆன்லைனில் அபுதாபியில் விற்பனையாகும் பிக் டிக்கெட் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். அந்த லாட்டரிக்கு 12மில்லியன் திர்ஹம் பரிசு விழுந்துள்ளது. இதன் இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 23கோடி ரூபாய் ஆகும்.
இது குறித்து அவர் கூறுகையில், இதை நான் எதிர்பார்க்கவில்லை. கடந்த சில மாதங்களாக நண்பர்களுடன் இந்த சீட்டை வாங்கி வந்தேன். இப்போது பரிசு விழுந்திருக்கிறது. எனது பெற்றோர் கிட்னி பிரச்னை காரணமாக இறந்து விட்டார்கள். இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரிக்கு திருமணம் ஆகிவிட்டது. ஒரு சகோதரி படித்து வருகிறார்.

இந்த பணத்தை வைத்து சகோதரிகளுக்கு உதவவேண்டும். பெற்றோர் விற்ற நிலத்தை திரும்ப வாங்க வேண்டும். நான் ஒருமுறை கூட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றதில்லை. இந்த பரிசு தொகைக்கான காசோலையை வாங்க முதன்முறையாக அங்கு செல்லவுள்ளேன் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details