கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி, பாகிஸ்தான் விமானப் படையைச் சேர்ந்த சுமார் 24 விமானங்கள், எல்லையைக் கடந்து இந்திய ராணுவத் தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளன.
இதை எதிர்கொள்ள 8 இந்திய விமானப் படை விமானங்கள் புறப்பட்டுள்ளன. அப்போதுதான் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருக்கும் விமானப் படை ரேடார், குறைந்த உயரத்தில் பறக்கும் ஒரு விமானத்தை கண்டுபிடித்தது. அது யாருடையது என்று அறிய முடியாத வகையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், ஹெலிகாப்டர் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இறுதியில்தான் அது சொந்த நாட்டுப் போர் ஹெலிகாப்டரான எம்.ஐ.எஃப். 17 என்பது தெரியவந்தது. இதில் 6 விமானப் படை வீரர்கள், ஒரு நபர் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அச்சமயத்தில் பொறுப்பில் இருந்த விமானப்படை தளபதி ராகேஷ் குமார், இது மிகப்பெரிய தவறு என ஒப்புக்கொண்டுள்ளார்.