ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) பயங்கரவாதிகள் பதுங்கும் இடங்களை பாதுகாப்பு படையினர் தேடி வந்தனர். அப்போது, சோபூர் பகுதியில் உள்ள வார்போரா மற்றும் டேங்கர்போராவில் உள்ள பழத்தோட்டங்களில் ஆய்வுசெய்த போது, பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு - பயங்கரவாதிகள்
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.
![பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு துப்பாக்கி சூடு: பாதுகாப்பு படையினரை தாக்கிய பயங்கரவாதிகள்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-04:40:37:1597576237-8440133-oo.jpg)
Terrorist attack in kashmir
இதில், யாருக்கும் எவ்வித பாதிப்புமில்லை என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தில் பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.