ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் நடைபெற்றுவருகிறது. அங்குள்ள நவகடல் என்ற பகுதியில் ஹிஸ்புல் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தங்கியிருப்பதாக வெளியாகிய தகவலின் பேரில், பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த தேடுதல் வேட்டையின் போது, பாழடைந்த விடுதி ஒன்றில் ரகசியமாக பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதையடுத்து, பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகளும் ஐந்து மணி நேரம் மோதிக்கொண்டதில் பயங்கரவாதிகள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் காவல்துறையினரும் இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினருடன் இணைந்து செயல்பட்டனர். ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்குப் பின் பிரிவினைவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. அண்மையில் ஹிஸ்புல் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கிய பயங்கரவாதி தாஹிர் அகமத் பட் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தற்போது லாக்டவுன் நிலவிவருவதால் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு பதுங்கு குழிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ராணுவத்தினர் களமிறங்கியுள்ளனர்.
இதையும் படிங்க:'ஒரு நாடு ஒரே ரேசன் கார்டு’ திட்டத்தின் பயன்களும் சவால்களும்!