தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஸ்ரீநகரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை - Jammu and Kashmir Police

ஸ்ரீநகர்: பாதுகாப்பு படையினருடன் இன்று ஏற்பட்ட மோதலில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

militant-killed-in-encounter-near-srinagar
militant-killed-in-encounter-near-srinagar

By

Published : Jul 25, 2020, 5:34 PM IST

ஸ்ரீநகரின் புறநகரில் பாதுகாப்பு படையினருடன் இன்று (ஜூலை25) ஏற்பட்ட மோதலில் பயங்கரவாதி ஒருவர் கட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, காவல்துறையினர் தரப்பில் கூறும்போது, “ஸ்ரீநகர் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவல் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ரன்பீர்கர் பகுதியில் இன்று காலையில் பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். இதற்கு, பாதுகாப்பு படைகள் பதிலடி தாக்குதல் நடத்திய போது தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்” எனத் தெரிவித்தனர்.

கடந்த செவ்வாய்கிழமை ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் பாதுகாப்பு படையினருடன் இணைந்து ஜம்மு காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் ஒரு பயங்கரவாத மறைவிடத்தை அழித்தனர் என்பது குறிப்படத்தக்கது.

இதையும் படிங்க: இ-பாஸ் சிரமங்கள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்படும்'

ABOUT THE AUTHOR

...view details