புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை குறித்தான வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வில் நடைபெற்றுவருகிறது.
இந்த வழக்கில் மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் பரவல், ஊரடங்கினால் சொந்த ஊர்களுக்கு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை, போக்குவரத்து வசதி, உணவு ஆகியவை அளிக்கப்படுவதன் நிலை குறித்து மகாராஷ்டிரா அரசு தாக்கல் செய்ய முன்னதாக அமர்வு அறிவுறுத்தியிருந்து
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (ஜூலை9) மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மகாராஷ்டிரா மாநில அரசு வழக்குரைஞர், “புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி சொந்த ஊர்களில் சரியான வேலையில்லாததால், மே 1 ஆம் தேதி முதல், சுமார் மூன்று லட்சத்து 50ஆயிரம் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு வந்துள்ளனர்” என்றார்.
அப்போது, மாநிலத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் தற்போதைய நிலையை இன்னும் விரிவாக விளக்கி அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஜூலை 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க...தங்க கடத்தல் ராணி ஸ்வப்னாவுக்கு முன்பிணை கோரி மனு!