கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலைத் தொடர்ந்து, நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, இன்றுடன் ஊரடங்கு முடிவடைந்த நிலையில், மே 3 ஆம் தேதி ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டார்.
மகாராஷ்டிராவில் வெளிமாநில தொழிலாளர்கள் மாபெரும் போராட்டம் - Migrant workers
19:07 April 14
வெளிமாநில தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மகாராஷ்டிராவில் போராட்டம் நடத்தினர்.
ஊரடங்கு உத்தரவால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்ட நிலையிலும், வெளிமாநில தொழிலாளர்கள் அடிப்படை வசதிகளின்றி தவித்துவருகின்றனர். இந்நிலையில், மகாராஷ்டிரா பாந்த்ரா பேருந்து பணிமனையில் ஊரடங்கு விதிகளை மீறி வெளிமாநில தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அத்தியாவசியப் பொருள்களை வழங்க வேண்டும், தங்கள் மாநிலங்களுக்குத் திருப்பி அனுப்பிவைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர். போராட்டத்தை திரும்பப்பெறக் கோரி உள்ளூர் தலைவர்கள் கோரிக்கை விடுத்தபோதிலும், அவர்கள் கூட்டத்தை கலைக்கவில்லை.
பின்னர், காவல்துறையினர் தடியடி நடத்திப் போராட்டக்காரர்களைக் கலைத்தனர். இந்த மாபெரும் போராட்டத்தால் கரோனா வைரஸ் தொற்று மேலும் அம்மாநிலத்தில் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.