நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கினால் வேலை, வருமானமின்றி தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், லாரிகளில் ஆபத்தான பயணம் மேற்கொண்டும், நடை பயணமாகவும் தங்களது சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.
அவ்வாறு ஆபத்தான முறையில் இரண்டு குழந்தைகளை தொட்டிலில் அமரவைத்து தோளில் தூக்கிச் சென்ற சத்தீஸ்கரைச் சேர்ந்த ஒருவருக்கு காவல் துறையினர் உதவி செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் கடப்பாவில் பணிபுரிந்த சத்தீஸ்கரைச் சேர்ந்த அந்த நபர், வேலை, வருமானம் இல்லாததால் தனது குழந்தைகள், குடும்பத்தாருடன் சொந்த ஊருக்குச் செல்ல 1,000 கி.மீ., பயணத்தை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளார்.
அதன்படி, கடந்த 7ஆம் தேதி கடப்பாவிலிருந்து கர்னூலை நோக்கி பயணத்தை தொடங்கிய குடும்பத்தாரை அடோனி பகுதி அருகே ஆந்திர காவல்துறையினர் கண்டனர். அவர்களுக்கு உணவு அளித்து கர்னூலை நோக்கிச் சென்ற வாகனத்தில் அனுப்பி வைத்தனர். இந்த ஊரடங்கினால், பலரும் சிரமத்திற்கு உள்ளாகியிருந்தாலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்தான் பெரும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
இதையும் படிங்க:'சொந்த ஊருக்குப் போயே ஆகணும்' - உரிய அனுமதியின்றி உ.பி. எல்லையில் கூடிய இடம்பெயர் தொழிலாளர்கள்!