ஊரடங்கு குடிபெயர்ந்த தொழிலாளிகளின் ஒட்டுமொத்த வாழ்க்கையையுமே முடக்கிவைத்தது. பலதரப்பட்ட தொழிலாளிகள் சொந்த ஊர் திரும்ப நடைபயணம் மேற்கொண்டனர். சிலர் சைக்கிள்களிலும், லாரிகளிலும் பயணித்தனர்.
இந்நிலையில், பெங்களூருவில் வசித்துவந்த குடிபெயர்ந்த தொழிலாளி சந்தன் ஜெனா, தபன் ஜெனா அங்கிருந்து, தங்களது சொந்த மாநிலத்திற்குத் திரும்ப முடிவுசெய்தார்கள்.
சைக்கிள் வழி பயணமாக செல்லலாம் என முடிவுசெய்த சந்தனிடம் சைக்கிளும் இல்லை, அதனை வாங்க பணமும் இல்லை. இது குறித்து சந்தன், “இரண்டு மாதங்களாக வேலையில்லை. இதனால் கையிலிருந்த சொற்ப பணமும் செலவாகிவிட்டது. சொந்த ஊருக்குச் சென்று மீத நாள்களைக் கடக்கலாம் என முடிவுசெய்தோம்.
ஆனால் எப்படிச் செல்ல...? என்ற கேள்வி மட்டுமே மிஞ்சியது. இதற்காக, என் மனைவியின் 15 ஆயிரம் ரூபாய் மதிப்புடையதாலியை விற்க வேண்டிய சூழலுக்குl் தள்ளப்பட்டேன்” என்றார்.
இதைத் தொடர்ந்து, சந்தன் தனது நண்பர் தபன் ஜெனாவுடன் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான இரண்டு சைக்கிள்களை வாங்கி பெங்களூருவை விட்டு ஒடிசா மாநிலம், பத்ராக் மாவட்டத்திலிருக்கும் பசுதேவ்பூருக்குப் புறப்பட்டுள்ளார்.
சைக்கிளில் பயணித்த சந்தன், சந்தனின் மனைவி, தபன் ஜெனா ஆகிய மூன்று குடிபெயர்ந்த தொழிலாளிகளையும் கட்டாக் மாவட்டத்திலுள்ள (ஒடிசா) சமூக செயற்பாட்டாளர்கள் அடையாளம் கண்டனர். இதையடுத்து, அவர்களுக்கு உணவளித்து மூவரையும் வாகனம் மூலம் பத்ராக்கிற்கு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளனர்.
இதையும் படிங்க:தாலியை விற்று கணவரின் இறுதிச் சடங்கை நடத்திய மனைவி!