கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இச்சமயத்தில், வெளிமாநிலத்திலிருந்து பணிபுரிய மற்ற மாநிலங்களுக்குப் பயணித்த தொழிலாளர்கள் அனைவரும் ஊரடங்கு காரணமாக, அப்பகுதியிலேயே சிக்கிக் கொண்டனர். போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதால், சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் திணறி வருகின்றனர்.
தினசரி சம்பளத்தை மட்டுமே நம்பி இருந்த காரணத்தினால், அவர்கள் ஒரு வேலை உணவை மட்டுமே சாப்பிட்டு வாழவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களின் நிலைமை புரிந்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும், சொந்த ஊர் செல்வதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைக்கின்றனர்.